இந்தியாவிலே இறைவனுக்குச் சொந்தமான நிலம் எனப்போற்றப்படுவது கேரள மா நிலம். அதை சேர நாடு என்று பாடுகிறார் பாரதியார். புராதன சேர மன்னர் வம்சத்தின் வழியிலே வந்தவர்கள் ஆட்சிசெய்த இராசதானியை வேணாடு என்பர். இந்த சிறிய வேணாடு இராசதானியே பிற்காலத்தில் த்ருவாங்கூர் சமஸ்தானமாகப் பரிணமித்தது என்கிறது வரலாறு. அப்படிப் பரிணமித்தது மட்டுமன்றி அது காலங்காலமாக நிலைத்தும் நின்றது.

மன்னர்களாயினும் திருவாங்கூர் சமஸ்தான அரசர்களின் எளிமையை அவர்களது அரண்மனை எடுத்தியம்பும். அரண்மனை என்றவுடனே மனக்கண்ணில் விரியும் மாட மாளிகைகளையும் கூட கோபுரங்களையும் அங்கே காண முடியாது. அரண்மனை என்பது ஆடம்பரமல்ல என்பதை கேரளத்துக்கே உரித்தான பாணியில் சொல்கிறது பத்ம நாபபுரம் அரண்மனை.

இந்த ஸ்ரீ பத்ம நாபசுவாமி கோயில் திருவனந்த புரம் கோட்டைக்குள் அமைந்திருக்கிறது. இது வைணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகும். அதே வேளை கேரளாவில் புகழ்பெற்ற ஏழு பரசுராம க்ஷேத்திரங்களிலும் ஒன்றாகும். இக்கோயிலின் வரலாறு கி.பி 8 ஆம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பிக்கிறது. இருப்பினும் சரித்திரச் சான்றுகள் என, கி.பி., 1375க்கு, பிறகு தான் உள்ளது. ஐதீகங்களின்படி, கோவிலில் உள்ள அனந்தசயனத்தில் காட்சி அளிக்கும் பத்மநாப சுவாமி மூலவரை, திவாகரமுனி என்பவர் பிரதிஷ்டை செய்ததாக ஒரு தகவலும், வில்வமங்கல சுவாமி தான் மூலவரை பிரதிஷ்டை செய்ததாக மற்றொரு தகவலும் தெரிவிக்கிறது.
இது தவிர, 10ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் தான் இக்கோவிலை எழுப்பியதாக தகவல்கள் உள்ளன. இக்கோயில்கள் குறித்து பல்வேறு தகவல்கள், "மதிலகம் ஆவணங்கள்' என்ற பதிவேடுகளில் தான் நிறைய உள்ளன. இதில், கோயில் நிர்வாகம், உற்சவங்கள், சட்டத் திட்டங்கள், உரிமை கோரும் விவாதங்கள், சடங்குகள், ஆராட்டு, பள்ளி வேட்டை, கொள்ளை, கோயிலுக்கு கிடைக்கப் பெற்ற பரிசுகள் என, பல தகவல்களும் அடங்கியுள்ளன. தவறு செய்தவர்களிடம் இருந்து அபராதமாகவும், வெளியே இருந்து சுவாமிக்கு தானமாக கிடைக்கப் பெற்ற அதிகளவு தங்க நகைகள், யானைகள் என பலவும் அக்காலம் தொட்டே கிடைக்கத் தொடங்கியுள்ளது எனவும் சான்றுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இக்கோயிலில் இருந்து கொள்ளை போன பல பொருட்கள் மீண்டும் கிடைத்துள்ளன. இக்கோயிலின் சொத்துகளை, பிள்ளைமார் என அழைக்கப்பட்ட ஒரு பிரிவினர் தான் நிர்வகித்து வந்துள்ளனர். கோயில் நிர்வாகத்தை, சபா என்ற அமைப்பு கவனித்து வந்தது. இதில் இவ்விரு பிரிவினரும், கோயிலுக்கு உரிமையாளரான மன்னரும் தனித்தனியே பிரிந்து கலகத்தில் ஈடுபட்டனர்.இவ்வரிய வாய்ப்பை அங்கு வியாபாரத்திற்காக வந்திறங்கிய ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.
அப்போது, கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஒல்லாந்தர் ஆட்சி செய்து வந்தனர். இந்நிலையில் தான் அதிவீரனும், சிறந்த புத்திசாலியுமான மார்த்தாண்ட வர்மா, 1729ம் ஆண்டு திருவிதாங்கூர் பகுதியில் ஆட்சி பொறுப்பேற்றார்.
எதிரிகளை வீழ்த்தி, கோவில் நிர்வாகத்தில் இருந்து வந்த கலகங்களை அடக்கி ஒடுக்கினார். இதையடுத்து, போரிட வந்த ஒல்லாந்தர்களை குளச்சல் போர் மூலம் மார்த்தாண்ட வர்மா விரட்டினார். வேணாடு என்ற சிறிய பகுதியை கொச்சி வரை விரிவாக்கவும் செய்து, திருவிதாங்கூர் என்ற பெரிய நாட்டை உருவாக்கினார். தான் போர் மூலம் மீட்டெடுத்த பகுதிகளை, பத்மநாப சுவாமிக்கு அர்ப்பணம் செய்தார்.
அந்நிகழ்ச்சி, "திருப்படி தானம்' என்ற சடங்காக அன்று முதல் கோயிலில் தொடங்கியது. 1880 - 1885ம் ஆண்டுகளில் திருவிதாங்கூர் பகுதியில் கடும் பஞ்சம் தலைதூக்கியபோது, மன்னராக இருந்த விசாகம் திருநாள் மகாராஜா, கோவிலில் இருந்து சில பொருட்களை எடுத்து விற்றுவிட்டதாக பலர் கூறி வந்தாலும், அது குறித்த எந்தவொரு ஆதாரமும் இல்லை. இக்கோவிலில் பூமிக்கடியில் உள்ள ஆறு அறைகளில் தான் தற்போது கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

தற்போது காணப்படும் கோபுரமும் ஆலயமும் மன்னர் மார்த்தாண்டவர்மாவால் (1729-1758) கட்டப்பட்டவை.
மன்னர் மார்த்தாண்டவர்மாவின் காலத்தை திருவாங்கூர் சமஸ்தானத்தின் பொற்காலம் என்பர். அவர் திருவாங்கூர் சமஸ்தான மன்னர்களுள் இராஜதந்திர ரீதியாகவும் பலம் வாய்ந்தவராகக் கருதப்பட்டார். தம் சமஸ்தான மன்னர்களை ஸ்ரீ பத்மநாபதாசர்களாகப் பிரகடனப்படுத்தியவரும் அவரே. அதன் பின்னர்தான் திருவாங்கூர் சமஸ்தானமே ஸ்ரீ பத்ம நாபனின் உடைமை என்ற கொள்கை வலுப்பெற்றது எனலாம்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கூட திருவாங்கூர் சமஸ்தான மன்னர்கள் அவர்களுடன் அனுசரித்து வாழத் தலைப்பட்டனர். ஆங்கிலேயர் கேட்ட வரிகளையும், கப்பங்களையும் தயக்கமின்றிக் கொடுத்தனர். ஆதலால் தான் அவர்களது சசெல்வம் அந் நிய ஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்படவில்லையோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

ஸ்ரீ பத்ம னாப சுவாமி கோயிலைப் பொறுத்த வரையிலே திருவாங்கூர் சமஸ்தானத்தின் அரசபரம்பரையினரே காலங்காலமாக சேவை புரிந்து வருகின்றனர். பிற்காலத்தில் அறக்கட்டளையை நிறுவி நிர்வகித்தும் வருகின்றனர். இக்கோயிலிலே ஆறு பாதாள அறைகள் இருக்கின்றன. அவை பல நூற்றாண்டுகளாகத் திறக்கப்படவில்லை. அந்த இரகசிய அறைகளைத் திறக்கக் கோரி உச்ச நீதி மன்றிலே பொது நல வழக்க்ன்று தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றுஅந்த இரகசிய அறைகளைத் திறப்பதற்கு குழுவொன்றை நியமித்தது.அக்குழுவில் முன்னாள் நீதிபதியொருவர் உட்பட ஏழு பேர் அடங்கியிருக்கின்றனர். அவர்களுள் இருவர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவராவார். உச்ச நீதிமன்றம் குழுவை நியமித்ததோடு மட்டும் நின்று விடவில்லை.மா நில அரசு கோயிலை எடுத்துக்கொள்ளவும் தடை விதித்தது.
உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி பாதாள அறைகளைத் திறகும் பை ஆரம்பமாகியது. பூட்டிக்கிடந்த ஆறு பாதாள அறைகளில் ஐந்து அறைகள் திறக்கப்பட்டன. அவற்றிலே சேமிக்கப்பட்டிருந்த பொக்கிஷங்களைக் கணக்கெடுக்கும் பணியும் நடந்தது. அறையைத் திறந்த குழு ஆச்சரியமடைந்தது. தேக்கு மரத்திலான பெட்டிகள் பல காணப்பட்டன. அவற்றைத் திறந்த போது நாணயங்கள், நகைகள், ஆபரணங்கள், கற்கள் பதித்த கிரீடங்கள், தாம்பாளங்கள், விளக்குகள், வழிபாட்டுப் பொருட்கள், பல்வேறு பாரம்பரிய, கலை நயம் மிக்க பொருட்கள் என தங்கம் ஜொலித்தது. அங்கே தங்கத்திலான பொருட்கள் மட்டும் காணாப்படவில்லை. வி லைமதிப்பில்லாத வைர வைடூரியக் கற்கள், அவை பதிக்கப்பட்ட பொருட்கள், வெள்ளியாலான பொருட்கள், கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்திலான சுவாமி சிலைகள் ஆகியனவும் கண்டெடுக்கப்பட்டன.
அவை யாவுமே திருவாங்கூர் சமஸ்தானத்தால் கோயிலுக்கு வழங்கப்பட்டவையாகும். வேற்று நில மன்னர்களால் திருவாங்கூர் மன்னர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப்பொருட்களும் அவற்றில் அடங்குகின்றன.

அக்குழுவில் இருந்த முன்னாள் நீதிபதிகளுள் ஒருவர் ஊடகங்களுக்குக் கருத்துத்தெரிவிக்கையில், பாதாள அறைகளைத் திறந்து பொக்கிஷங்களைப் பார்வையிட்டபோது தனக்கு ஒரு மாய லோகத்தினுள் நிற்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாகக் கூறியிருந்தார்.

இவ்வளவு காலமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த திருவனந்தபுரம் ஸ்ரீ பத்ம நாப சுவாமி கோயில் தற்போது இந்தியாவின் பணக்காரக் கோயில்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. இவையெல்லாம் இப்படியிருக்க, கோயிலினுள் கண்டெடுக்கப்பட்டிருக்கும் இப்பெரும் பொக்கிஷத்தை யார் பொறுப்பெடுப்பது, எதற்குப் பயன்படுத்துவது எனப் பல்வேறு சர்ச்சைகள் தோன்றியுள்ளனர். அவை ஒருபுறமென்றால் மறு புறமோ கோயிலைச் சுற்றி பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த ஒரு இலட்சம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களைப் பல்வேறு அபிவிருத்தித் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம் என்கின்றனர் ஒரு சாரார். இவை யாவும் கோயிலிலேயே பாதுகாக்கப்பட வேண்டும் என்கின்றனர் ஆன்மீக வாதிகள். இந்தச்செல்வங்கள் இந்திய அரசின் கருவூலத்திலே சேர்க்கப்பட வேண்டும் எங்கின்றனர் மற்றொரு தரப்பினர். ஆலயத்துக்குள்ளேயே அருங்காட்சியகமொன்றை உருவாக்கி அவற்றை அங்கேயே வைத்துப் பாதுகாக்கவேண்டும் என்கின்றனர் தொல்லியல் துறையினர்.
இந்த கோயிலிலே கண்டெடுக்கப்பட்டிருக்கும் புதையல் மக்களின் சொத்தாகும். ஆதலால் அது மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். மத்திய அரசும் அரச குடும்பமும் இணைந்து இந்த சொத்தை எப்படி அபிவிருத்தித்தேவைகளுக்குப் பயன்படுத்தலாம் எனக் கலந்தாலோசிக்க வேண்டும் என்கிறார் அரசியல்வாதி சி.திவாகரன்.

அரசியல் உலகிலே தம்மைப் பாதுகாத்த்துக்கொள்ளும் அடிப்படை நோக்கத்தில் இருக்கும் அரசியல் வாதிகளோ இந்த சொத்துக்கள் யாவும் கோயிலிலேயே இருக்கவேண்டுமெனவும் மத்திய, மா நில அரசுகள் கோயிலுக்கு போதிய பாதுகாப்பை வழங்க வேண்டுமெனவும் கோருகின்றனர்.
அன்றைய திருவாங்கூர் சமஸ்தானம் ஏற்றுமதியில் பிரசித்தி பெற்றிருந்தது.இந்த புதையல் எல்லாம் வெறுமனே வாசனை திரவியங்களை ஏற்றுமதி செய்ததால் கிடைத்த செல்வம் மட்டுமல்ல. மக்கள் மன்னருக்கு அளித்த வரியுடன் மன்னருக்கு பல்வேறு தரப்பினரும் வழங்கிய பரிசுப்பொருட்களையும் உள்ளடக்குகின்றன.
ஆதலால் அவை உள்ளூர்ச் சந்தையிலே விற்கப்படவேண்டும். அவ்வாறு விற்கப்பட்டுப் பெறப்படும் நிதி கேரள மக்களின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக நல மேம்பாட்டிற்குப் பயன்பட அவெண்டும் எங்கின்றனர் சில சமூக ஆர்வலர்கள்.
“இந்த பொக்கிஷங்கள் யாவுமே பல நூற்றாண்டுகாலம் பழைமையானவை. அவற்றை ஆய்வு செய்தால் பல வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கும். ஆதலால் மற்றவர்கள் கூறுவதுபோல் அவற்றை அழித்து அபிவிருத்தித் தேவைகளுக்குப் பயன்படுத்துவதென்பது சிந்திக்க அவெண்டிய விடயம்” என்கின்றனர் வரலாற்றாய்வாளர்கள்.
இந்த பொக்கிஷங்களை சமூக , சமய நலத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதில் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என திருவாங்கூர் அரச வம்சத்தினரில் தலைமைப் பொறுப்பை வகிக்கும் வேணுகோபால் என்ற சட்டத்தரணி தெரிவித்திருக்கிறார்.
இந்த சொத்துக்கள் யாவும் கோயிலுக்கு மட்டுமே சொந்தமானவை என அறிக்கை வெளியிட்டிருக்கிறார் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி

ஸ்ரீ பத்ம நாபன் கோயிலில் கண்டெடுக்கப்பட்டிருக்கும் புதையலைக் கண்டு முழு உலகுமே பிரமித்துப் போய் நிற்கின்றது. வெளி நாட்டு ஊடகங்கள் கோயிலை நோக்கிப் படையெடுத்தபடி இருக்கின்றன. வறுமைக் கோட்டுக்குக் கீழ இருப்போரை அதிகளவில் கொண்டிருக்கும் வளர்முக நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அப்படிப்பட்ட ஒரு நாட்டிலே உள்ள கோயிலில் ஒரு இலட்சம் கோடி பணம் என்பது வரலாறு தெரியாத பலருக்கும் ஆச்சரியமாகத் தான் இருக்கும்.
தென்னிந்தியாவின் வரலாறு மிகவும் புராதனமானது. அது மட்டுமன்றி புராதன கால நாகரிகங்கள் கண்டிருந்த வளர்ச்சி வார்த்தைகளால் விபரிக்க முடியாதது. முப்பெரு மன்னர்களான சேர சோழ பாண்டியர்களின் ஆட்சியின் கீழ் இருந்த தேசம் அது. சோழ ஆட்சி உச்சத்திலிருந்த போது, கிழக்குலகின் பெரும்பான்மை நாடுகள் அதன் வசம் இருந்தன. தமது பெயர் காலங்காலமாக நிலைக்க வேண்டுமாயின் கோயிற்திருப்பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பது தென்னக மன்னர்கள் கொண்டிருந்த போக்காக அமைந்தது. விளைவு தென்னிந்தியா முழுவதும் கோயில்களால் நிறைந்தது.மன்னர்கள் தமது காலத்துக்கே உரித்தான முறையில், பல சந்ததிகளுக்கும் நீடித்து நிலைக்கக் கூடியவாறு கோயில்களைக் கட்டினர். அக்கோயில்களுக்காக பாதாள அறைகளிலே பொக்கிஷங்களையும் சேமித்து வைத்தனர். ஆனால் காலப்போக்கில் தென்னிந்தியாவில் தொடர்ந்த அந் நிய ஆக்கிரமிப்புக்களின் விளைவால் அவை கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. மக்களோ தமக்கே உரித்தான அரும்பெரும் சொத்துக்களைப் பாதுகாக்க முடியாதவர்களாக அறியாமை இருளி லே மூழ்கிக் கிடந்தனர்.
அந்தப் பேரரசுகளுடன் ஒப்பிடும் போது திருவாங்கூர் சமஸ்தானம் என்பது மிகவும் சிறியது எனலாம். அச்சிறிய சமஸ்தானம் கோயிலுக்காக வழங்கிய பொக்கிஷங்களின் பெறுமதியே ஒரு இலட்சம் கோடி ரூபாவைத் தாண்டுகிறது என்றால் பேரரசுகள் தென்னிந்தியக் கோயில்களுக்கு வழங்கியிருந்த பொக்கிஷங்களின் அளவைக் கற்பனை பண்ணியாவது பார்க்க முடிகிறதா?
அத்தனை பொக்கிஷங்களையும் அளவு கணக்கின்றிக் கொள்ளையடித்துச் சென்ற மேற்குலகு இன்று இந்தியாவையே ஆளுகிறது. இதுதான் காலம் கற்றுக்கொடுத்திருக்கும் பாடமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

ஒரு இலட்சம் கோடிக்குள் இ வையும் அடக்கம்
- · 1000 கிலோ கிராம் நிறையுடைய தங்க நாணயங்கள். அவற்றுள் சில நெப்போலிய மன்னனின் காலத்தவை
- · ஒரு சாக்கு நிறைய வைரக் கற்கள்
- · ஒரு தொன்னுக்கும் அதிகமான நெல் மணிகளை ஒத்த தங்கம்
- · வைர, வைடூரிய, ரூபி கற்கள் பதித்த அரிய விஷ்ணு சிலை. அதில் நேபாளத்திலிருந்து கொண்டுவரப்பட்ட சாளக்கிராமக் கற்களும் பதிக்கப்பட்டிருக்கின்றன
- · 18 அடிகள் உயரமான 35 கிலோ கிராம் நிறையுடைய ஆபரணம்
- · தங்கக் கயிறுகள்
- · கிழக்கிந்தியக் கம்பனியின் காலத்து நாணயங்கள்
- · தங்கப் பாத்திரங்கள்
- · சாக்கு மூடைகளில் கட்டப்பட்டிருக்கும் ஆபரணங்கள், கிரீடங்கள்
- · மரகதமும் ரூபியும் பதிக்கப்பட்ட இரண்டு தங்கச் சிரட்டைகள்
ஒரு இலட்சம் கோடி இந்திய ரூபா என்பது
- · 290 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளை அமைத்து நிர்வகிக்க உதவும்
- · டில்லி, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய 3 மா நிலங்களின் வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டுக்குச் சமனானது
- · இந்திய ரயில்வே துறையின் வருடாந்த மொத்த வருவாயை விட அதிகமானது
- · நேரு விளையாட்டரங்கை ஒத்த 400 விளையாட்டரங்குகளை அமைக்க உதவும்
- · இந்தியாவிலே 14,000 கிலோ மீற்றர் நீளமான தேசிய பெருந்தெருக்களை அமைக்க உதவும்
- · கேரள மா நிலத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும் கடனின் மூன்றரை மடங்காகும்
1 comment:
அருமையான தகவல்கள்
Post a Comment