பரீட்சாத்திகளுக்காக

இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் வவுனியா மாவட்ட பரீட்சார்த்திகளுடன் நான் வாராந்தம் பகிர்ந்துகொள்ளும் விடயங்கள் பொது நோக்கிலே இப்பக்கத்திலும் பகிரப்படுகின்றன.
இவ்விடயப்பரப்பின் தரவு மூலங்களாக இணையத்தளங்கள், இலத்திரனியல் பத்திரிகைகள், நான் ஊடகவியலாளராய் பணி புரிந்த காலங்களில் சேகரித்து வைத்திருந்த ஆய்வு முன்னளிக்கைகள் என்பன இருக்கின்றன. 
பல மூலங்களிலிருந்து தொகுக்கப்பட்ட விடயங்களாதலால் ஒவ்வொரு தரவுக்கும் அதன் மூலத்தைக் குறிப்பிடுதல் சற்று சிரமமாக இருக்கிறது.   பரீட்சையை எதிர்கொள்ளத் துணை நிற்றல் என்ற ஒரே குறிக்கோளின் அடிப்படையில் பதிவிடுவதால் எவரும் தவறாக எண்ணமாட்டீர்கள் என நம்புகிறேன்.


இலங்கையின் சமூக அரசியல் பொருளாதாரப் பின்னணி மற்றும் அதன் போக்குகள், சர்வதேச போக்குகள்
1.      சிறுகுறிப்பு வரைதல் 
(இலங்கை கல்வி நிர்வாக சேவை 2007)
a.        பெண்களுக்கு சம உரிமை வழங்கல்
·        'எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி!’- பாரதியார்
பெண்கள் ஜனாதிபதியாகவும், பிரதம ராகவும், எதிர்கட்சி தலைவராகவும், ஆட்சியாளர்களாகவும், விண்வெளி வீராங்கனைகளாகவும், கல்வியில் சிறந்தவர்களாகவும் இடம் பெற்றுள்ளனர்.
·         மேலும் பெண்கள் தொழிலதிபர்களாகவும், நிகழ்ச்சி தொகுப் பாளர்களாகவும், குடும்பத்தலைவியாகவும் மேலும் பல துறைகளில் மேம்பட்டவர்களாகவும் திகழ்கின்றனர். வைத்தியர்களாகவும், பொறியியலாளர்களாகவும், விமானிகளாகவும், விளம்பர  நங்கையராகவும் கூட தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
·         ஆண்களுக்குச் சமமாக பெண்களுக்கு  வாக்குரிமை வழங்கிய முதலாவது ஆசிய நாடாக இலங்கை இருக்கிறது. பெண்கள் தொடர்பான உரிமைகள் பற்றிய எண்ணக்கரு தோற்றம் பெற்று 1993ம் ஆண்டில் . நா. பொதுச் சபையின் அறிவித்தலின்படி பெண்களை ஒரு தனிப்பிரிவாக ஏற்று அவர்களுக்கான உரிமைகளை மட்டுமே முற்றுமுழுதாக கையாளும் வகையில் சர்வதேச பெண்கள் சமவாயம் விளங்குகிறது. அதை இலங்கையும் ஏற்றூக்கொண்டிருக்கிறது.
·         அதன்படி இலங்கை பெண்கள் சட்டமுறையில் உள்ளடக்கியுள்ள பெண்களின் உரிமைகளுக்கு ஏற்புடையதான சட்டங்களைப் பற்றிய விபரங்கள் பின்வருமாறு அமைந்துள்ளன.
·         அரசியல் அமைப்பில் சட்டம் மற்றும் பெண்கள் உரிமைகள்
 • ·         குற்றவியல் சட்டம் மற்றும் பெண்கள் உரிமைகள்
-          கருச்சிதைவு மற்றும் கருச்சிதைவினால் மரணமடைதல்
-          கடுங்காயம் விளைவித்தல்
-          மானபங்கம் செய்யும் நோக்குடன் ஒரு பெண்ணுக்கு தொந்தரவு செய்தல் மற்றும் குற்றவியல் பலாத்காரம்
-          பாலியல் தொல்லை கொடுத்தல்
-          கற்பழிப்பு
-          முறையில்லாப் புணர்ச்சி
-          பாலியல் துஷ்பிரயோகம்
-          பாலியல் துன்புறுத்தல்
 • ·         பெண்கள் உரிமைகளுக்கு ஏற்புடையதான ஏனைய சட்டங்கள்
-          விவாகம் மற்றும் மணநீக்கச் சட்டம்
-          ஆதனங்கள் மற்றும் பிற உரிமைகளைப் பெற்றுக் கொள்ளல்
-          குடும்ப வன்முறைகளை தடுத்தல் சட்டம்
·         பெண்களின் உரிமைகளின் விடயத்தில் அவர்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் சட்டத்தினால் வழங்கப்பட்டுள்ள பிற ஏற்பாடுகள் :
·         கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணை பரிசோதிப்பது தாதித் தாயார் ஒருவரினால் அல்லது பெண் பொலிஸ் அலுவலரினால் செய்யப்படுதல் வேண்டும். ஆண் பொலிஸ் அலுவலருக்கு அவரை பரிசோதிக்க உரிமை இல்லை. ஒரு பெண், பொலிஸ் நிலையமொன்றினுள் தடுத்து வைத்திருப்பது தாதித்தாயார் அல்லது பெண் பொலிஸ் அலுவலரின் பாதுகாப்பில் செய்யப்படுதல் வேண்டும். மட்டுமன்றி 1956ம் ஆண்டின் 47ஆம் இலக்கச் சட்டத்தின்படி பெண்கள் கைத்தொழிற்சாலைகளில் இரவு வேளைகளில் சேவையில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டது. 1984ம் ஆண்டின் 32ம் இலக்க திருத்தச் சட்டத்தின் பிரகாரம் பெண்கள் இரவு வேளைகளிலும் சேவை செய்யலாம் எனச் சட்டமாக்கப்பட்டுள்ளது. அதில் சில நிபந்தனைகளை முன்னிறுத்தியே இராக்காலங்களில் வேலைகளில் ஈடுபடலாம் என்பதையும் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளது.
·         பெண்களின் பிரவசக் காலத்திலும், பிரசவத்தின் பின்னுள்ள காலங்களிலும் பெண்களுக்கு பல்வேறு சலுகைகளும் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் விடயத்தில் அவர்களது உடல் ரீதியாக உள ரீதியாக பாதிக்கப்படுவது, மற்றும் பலாத்காரம் பயன்படுத்துதல், பயமுறுத்துதல், குடும்ப வன்முறை போன்ற பல்வேறு விடயங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பெண்கள் பாதுகாப்பு மீதான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு கடுமையான தண்டனைகளை வழங்கும் நிலைக்கு இலங்கை அரசின் சட்ட ஏற்பாடுகள் அமுலில் உள்ளதையும் காணலாம்.
·         இன்று சகல நிலைகளிலும் பெண்கள் ஆண்களுக்கு சரிநிகராக அனைத்து தொழிற் துறைகளிலும் வேலைத் தளங்களிலும் தரையிலும், ஏன் ஆகாயத்திலும் கடலிலும் பெண்கள் சேவையாற்றிக் கொண்டிருப்பது மனித உரிமைகள் எல்லோருக்கும் சமம் என்பதையே வலியுறுத்தி நிற்கின்ற விடயமாகக் கொள்ளலாம். ஆண்களும் பெண்களும் ஒரே தொழிலில் ஈடுபடுவதுடன் அவர்களுக்கும் ஒரே சம்பளத்தையும் பெறுகின்ற நிலைமை இன்று நாட்டில் காணப்படுகின்ற பெண்கள் உரிமைக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தினை காட்டுகிறது.
·         பெண் களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளான பெண் சிசுக்கொலை, குழந்தை திருமணம், பெண் அடிமைத்தனம் போன்றவை தடுக்கப் பட்டுள்ளது. இருப்பினும் பாலியல் கொடுமை, வரதட்சணை, பேறுகால மரணம், தீ விபத்துகளுக்கு ஆளாவது என பெண் கொடுமைகள் இன்றும் தொடர்கின்றன. அரசியல், தொழில், கல்வி, போன்றவற்றில் ஆண்களுக்கு நிகரான எண்ணிக்கையில் பெண்கள் இன்னும் உயரவில்லை. பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் சம உரிமை, சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்

        பெண்கள் வாக்குரிமை
 • ·               முதன் முதல் வாக்குரிமை வழங்கிய தன்னாட்சி நாடு: நியூசிலாந்து (1893)
 • ·              இறுதியாக வாக்குரிமை வழங்கிய நாடு : பூட்டான்(2008)
 • ·     21 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு  நிபந்தனையற்ற வாக்குரிமை வழங்கிய முதல் ஆசிய நாடு: இலங்கை (1931-டொனமூர் யாப்பு)
பெண்களுக்கு எதிரான வன்முறை
பெண்களுக்கெதிரான வன்முறையானது உலகளாவிய ரீதியில் அதிகரித்துக் காணப்படுவதற்கான காரணங்களாக:
* யுத்தமும் இடப்பெயர்வும்
* பாதுகாப்பற்ற நிலைமை
* அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை
* பொருளாதார நெருக்கடிகள்
* முகாம்களில் முறையான முகாமைத்துவமின்மை
* ஆண்கள் தமது ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் செலுத்துதல்
* நல்ல சுகாதார வசதிகளின்மை
* மகளிர் உரிமை தொடர்பாக போதிய தெளிவின்மை
போன்றவை காணப்படுவதோடு,  


பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு இலகுவாக ஆளாகக் கூடிய பெண்களாக பின்வருவோர் காணப்படுகின்றனர்.
* வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண்கள்
* வலதுகுறைந்த,
* கர்ப்பிணிப் பெண்கள்
* வயோதிபப் பெண்கள்
* சிறுபிள்ளைகளின் தாய்மார்
* சிறுமியர்
போன்றோர் முக்கியமானவர்களாகக் காணப்படு கின்றனர்

 உலகளாவிய முறையில் நடத்தப்பட்ட 50 ஆராய்ச்சிகளின் அடிப்படையில் மூன்றுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில் உடல், உள பாலியல் ரீதியான வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது தெரிய வந்துள்ளது.
b.ஈர நிலங்களின் சுற்றாடல் முக்கியத்துவம்
§  ஸ்பபொஞ்ச் போன்று  நீரை உறிஞ்சி தேவையான நேரத்தில் வெளிவிடும்
§  ஓடும் நீரின் வேகத்தைக் கட்டுப்படுத்தி மண்ணரிப்பைத் தடுக்கும்
§  நீரை வடிகட்டும். நீரில் இருக்கும் மாசுகளையும் மாசாக்கிகளையும் வடிகட்டும்
§  உயிரினங்களை வாழ் வைப்பதில் மழைக்காடுகளுக்கு நிகரானவை.
§  ஒதுக்கிவிடப்பட்ட தாவரங்களும் ஆழமற்ற நீர்ப்பரப்பும் பல உயிரினங்களுக்கு புகலிடம் வழங்கும்.
§  பறவைகளுடைய இனப்பெருக்கத்துக்கும் வழிவகுக்கும்
§  வெள்ள அழிவிலிருந்து காக்கும். வெள்ள நீரின் வேகத்தைக் கட்டுப்படுத்தி மேலதிக நீரை பரவலடையச் செய்யும்.
§  வெப்ப நிலை குறைவடையும் போது தாங்கல் தொழிற்பாட்டை மேற்கொள்ளும்
·                                                                           
                         இலங்கையின் நிலைமை
 • ·         அழிவடையும் அபாயத்தில் உள்ள சூழல் தொகுதி
 • ·         காரணம்: மனித நடவடிக்கைகள் (வர்த்தக விவசாய கைத்தொழில் அபிவிருத்தி)
 • ·         அத்து மீறிப்பிடித்தல்
 • ·         குப்பைகளைக் கொட்டி மாசாக்குதல்
 • ·         தாவரங்களை அழித்தல்
 • ·         அழிக்கும் இயல்புடைய தாவரங்களின் ஆக்கிரமிப்பு

c.        இஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்சினை
·         இரண்டாம்  உலகப்போரில்  ஹிட்லரால்   உலகம்  காணாத  பேரழிவுக்கு  உட்பட்ட  யூதர்கள்  தமது   பூர்வீக  நாடான  இஸ்ரேலுக்கு இடம்பெயர்ந்தனர். கட்டாந்  தரையாக  மக்கள் வாழாத  இடமாக   கிடந்த  நிலத்தில்   யூதர்கள்  தமது  குடியிருப்புக்களை  அமைத்தனர்அவர்களை  பலஸ்தீனர்களும்   அரப்புக்களும்  தாக்கினர்எனவே  தம்மை  பாதுகாக்கும்  முகமாக  யூதர்கள்  போர்களில் ஈடுபட்டனர். இப்படிதான்  எம்மவர்களில்  பெரும்பாலானவர்கள்  பலஸ்தீனம்  பற்றி  அறிந்து  வைத்துள்ளனர். ஆனால் உண்மை அதுவல்ல.
·         பலஸ்தீனம்  என்பது மிகவும் உயர்வான  கலாச்சாரம் கொண்ட மக்கள்  வாழ்ந்த பிரதேசம்அதை  யூதர்கள்  ஆக்கிரமித்தனர்இன்று  உலகலாவிய   ரீதியில்   இஸ்லாமிய   மத  தீவிரவாதம்   இந்தளவுக்கு  கொழுந்து விட்டு எரிவதற்கு  பலஸ்தீன ஆக்கிரமிப்பு   ஒரு முக்கிய காரணமாக அமைகின்றது.
·         இஸ்லாமிய   மத  பயங்கரவாதத்தை  ஒருபோதும்  ஏற்றுக்கொள்ள முடியாது  என்பது எவ்வளவு  சரியானதோ   அதேபோல்  அல்லது   ஒரு மடங்கு  மேலாக சியோனிஸ பயங்கரவாதத்தை   ஏற்றுக்கொள்ளமுடியாதுசியோனிஸம்  என்பது   யூத தேசியவாதத்தின்  அடிப்படையாகும்பைபிள் (பழைய ஏற்பாடுஅடிப்படையில்  ஜகொப்  (jacob ) என்பவரது  வாரிசுகளோ  யூதர்கள்அவர்களது  நிலமே  இஸ்ரேல்எனவே  உலகம்  முழுவதும்  பரவி  கொடுமைக்கு  உள்ளாகும்   யூதர்களது   துன்பத்திற்கு  முடிவாக  இருக்ககூடியது   தமது  பூர்வீக  நாடான  இஸ்ரேலை   மீட்டு   அடைவதென்பதே   சியோனிஸ வாதிகளின்  வாதமாகும்.
·         இந்த வாதத்தின்  அடிப்படையில்  1881 இல்  பலஸ்தீனத்தில்  நவீன  கால குடியேற்றம்  ஆரம்பமானது.   இக் குடியேற்றம்  போரின் அடிப்படையில்  அல்லாது   அரேபியர் துருக்கியரிடமிருந்து  நிலங்களை  வாங்குவதன்  மூலம் இடம்பெற்றது.
·         1878  ஆம் ஆண்டு  462 465  ஆக இருந்த பலஸ்தீன  சனத்தொகையில்  முஸ்லிம்களும்    அரபு கிறிஸ்தவர்களும்  96 ஆறுவீதமாக  இருந்தனர். யூதர்கள் 3.2 வீதமே இருந்தனர். ஆனால்  1882 -1914  ஆண்டுகளிற்கிடையில்   ஐரோப்பாவிலிருந்து   65 000 யூதர்கள்   புதிதாக வந்து  குடியேறினர்இதன் பலனாக  1922 ஆண்டு  சனத்தொகையில்  முஸ்லிம்களும்    அரபு கிறிஸ்தவர்களும்  87.6  வீதமாகவும்  யூதர்கள்  11  வீதமாகவும் மாறினர்.
·         இதற்கு   இஸ்ரேல்  எனும் தனிநாடு  அமைவதற்கு   பிரித்தானியா  காட்டிய  அக்கறை  முக்கிய காரணமாக  இருந்ததுடன்  யூதர்களுக்கு  பலத்தை  தருவதாகவும்  அமைந்ததுகுறிப்பாக 1920களில்  பலஸ்தீனம்  பிரித்தானிய  நிர்வாகத்துக்குள்  வந்தமை   பலஸ்தீனர்களுக்கு  பின்னடைவாக   அமைந்தது. 1920 – 1931 ஆண்டு காலப்பகுதியில்  மேலும்  108 825  யூதர்கள்  பலஸ்தீனத்தில்  குடியேறினர்இக்காலப்பகுதியில்  அரேபியர்களுக்கும்    யூதருக்குமிடையில்   மோதல்  வலுத்தது.
·         1929  நிகழ்ந்த மேதால்களில்  133  யூதர்கள்  அரபுக்களால்  படுகொலை  செய்யப்பட்டனர்எனினும்  குடியேற்றம்  தொடர்ந்தது.   1931 ஆண்டு சனத்தொகையில்   முஸ்லிம்களும்    அரபு கிறிஸ்தவர்களும்  8.6  வீதமாகவும்  யூதர்கள்  16.9 வீதமாகவும் மாறினர். இதற்கு  ஜேர்மனியில்  நாசிகளின்  பயங்கரவாதமும்  முக்கிய காரணமாக அமைந்ததுகுறிப்பாக  ஹில்லரது  பயங்கரவாதம்  காரணமாக  1932- 1936  காலப்பகுதியில்  174 000 யூதர்கள்  பலஸ்தீனத்தில்  வந்து குவிந்தனர்.
·         பின்னர் 1937- 1945  ஆண்டு  காலப்பகுதியில்  119 800   யூதர்கள்  பலஸ்தீனத்துக்கு   வந்து சேர்ந்தனர்அதாவது  1878 ஆம் ஆண்டு   பலஸ்தீன  மக்கள்  தொகையில் 3.2 வீதமாகவும்  1922 இல்  11 வீதமுமாக  இருந்த  யூதர்கள் 1940 அண்டு 40%  உயர்ந்தனர்அதேபேர்ல்  பலஸ்தீனத்தின்   28 வீதமான  நிலப்பகுதியும்   சியோனிச  நிறுவனங்களால்  வாங்கப்பட்டிருந்தனயூதமக்களில்  பலரும்  தமக்கான நிலங்களை வாங்கியிருந்தனர்.
·         இந்த குடியேற்றங்களுக்கு  எதிராக  பலஸ்தினர்கள்  கலகங்களில்   ஈடுபட்டபோதும்  யூதர்கள்  வெற்றி கொண்டனர்.   இதேவேளை  1939 இல் பிரித்தானியா  யூதர்களின்  வருகையும்  யூதர்களால் பெருமளவில்   நிலங்கள்  வாங்கப்படுவதையும்  கட்டுப்படுத்துவதாக  ஏற்றுக்கொண்டதுபிரித்தானியாவின்   ஆட்சியில்  அதிருப்தி கொண்டிருந்த  சில ஆயுதக் குழுக்கள் பிரித்தானிய  படைகளுக்கு   எதிராக  மறைமுகமான  தாக்குதல்களில் ஈடுபட்டன.

·         அரபுக்களுக்கும்  யுதர்களுக்கும்   இடையிலான  வன்முறைகளை  கட்டுப்படுத்த  முடியாத  நிலையில்  1947  ஆம் ஆண்டு  பிரித்தானியா  பலஸ்தீன  பிரச்சனையை  .நா. விடம்  கொண்டு சென்றது. .நா.வானது  பிரித்தானிய  அமெரிக்க  அழுத்தங்களுக்கு  உட்பட்டு  பலஸ்தீனத்தை  அரபுயூத நாடுகளாக  பிரிப்பதாக   அறிவித்தது. ஜெருசலேம்  சர்வதேச  நகராக அறிவிக்கப்பட்டது.
·         பலஸ்தீன  சனத்தொகையில்  மூன்றில்  இரண்டுக்கும் அதிகமான  சனத்தெகையை கொண்ட  அரபுகளுக்கு  43 வீதமான  நிலத்தையும்மூன்றில்  ஒரு   சனத்தெகையை  கொண்ட  யூதர்களுக்கும்   56 வீதமான  நிலத்தை  வழங்குவதாக   .நா. அறிவித்தது.
·         அதிலும்  யூதர்களுக்கு  வழமான  நிலங்கள்  வழங்கப்பட்டது. எனினும்   திருப்தியடையாத  யூதர்கள்  பல முக்கிய  அரபு தேசங்களை  கைப்பற்றினர். நுர்ற்றுக்கும்  அதிகமான   மக்கள் கொல்லப்பட்டனர்அரப்புகள்  சகல  உடைமைகளையும்  இழந்து  அகதிகளாக  பல  நாடுகளுக்கும்  தப்பியோடவேண்யேற்பட்டதுஇதன் விளைவாக  1948  ஆம் ஆண்டு   மே மாதம் 15 ஆம்  திகதி  அயல்நாடுகளின்  அரபு  இராணுவ  வீரர்கள்  பலஸ்தீனத்தில்  புகுந்தனர்.
·         அவர்களுக்கு  எதிராக  இஸ்ரேல்  போரை   மூர்க்கத்தனமாக  நடத்தியதுஇஸ்ரேலரது  யுத்த  தந்திரங்களை   நன்கறிந்த  போர் வரலாற்று  வல்லுனரான  Mart  in Van  Crevelld  இனது   கருத்தின் படி  படைப்பலத்தில்  அரபு  இராணுவமே   பின்  தங்கி  இருந்தது.  68 000  அரபு படை  வீரர்களும்   90 000  இஸ்ரேல்  படை வீரர்களும்   போரில் பங்குகொண்டனர்.   78 வீதமான   பலஸ்தீன   நிலங்கள்   இஸ்ரேலு்ககு உரிதாக   மாறின.  ‘மேற்குகரை’    ஜோர்தானின்  கட்டுப்பாட்டிலும்  காசாபகுதி   எகிப்தின் கட்டுப்பாட்டிலும்  வந்தன.
·         போரின்  பின்னர்  அரபுநாடுகளுக்கும்  இஸ்ரேலுக்கும்  இடையில்  சமாதானம்  அறிவிக்கப்பட்டாலும்  கூட  பலஸ்தீனத்தில்  சமாதானம் கானல் நீராகவே  அமைந்ததுஏழு  இலச்சம்  பலஸ்தீன மக்கள்  அகதிமுகாம்களில்   நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். பலஸ்தீன  மக்கள்  வாழ்ந்த  நிலங்கள்  யூதக்குடியிருப்புக்களாகவும்   விவசாய  நிலங்களாகவும்   மாற்றப்பட்டனஇதன் மூலமாக   பலஸ்தீனர்கள்  தமது  சொந்த  இடங்களுக்ககு   திரும்புவதற்கு  தடைவிதிக்கப்பட்டது.
·         1950களிலும்  முற்றாக  அமைதி நிலவவில்லை   சிறு  சிறு  மோதல்கள்  இடம்பெற்றே  வந்தன.  1956 இல்    எகிப்து  சூயஸ்  கால்வாயை   நாட்டுடமையாக்கியது   தொடர்பில்   எகிப்திற்கும்  – பிரத்தானிய   பிரான்ஸ்   தரப்புக்குமிடையே   போர் ஏற்பட்டதுஇதில்  எகிப்துக்கு  எதிரான அணியில்  இஸ்ரேல்  இணைந்து  போரிட்டது.   1967 இல்   சிரியா, யோர்தான், எகிப்து   ஆகிய நாடுகளுடனான  போரில்  காசா  பகுதி,    கிழக்கு  ஜெருசலேம், மேற்கு கரை  ஆகியவை  ஆக்கிரமிக்கப்பட்டன.
·         பலஸ்தீன  பகுதிகளை  இஸ்ரேல்  ஆக்கிரமித்ததுமேலும்  பல  இலச்சக்கணகான   பலஸ்தீனர்கள்  அகதிகளாக்கப்பட்டனர். ஆக்கிரமிப்பை  .நா.பாதுகாப்பு சபை  ஆக்கிரமிப்பு  பகுதிகளிலிருந்து  இஸ்ரேல்  வெளியேற  வேண்டும்  என  தீர்மானம்   நிறைவேற்றிய  போதும்   இன்றுவரை அது  நிறைவேறவில்லை.   இஸ்ரேலின்   அடக்குமுறைக்கு  எதிரான   பலஸ்தீன   விடுதலை இயக்கம், ஹமாஸ்  போன்றவற்றின்  தாக்குதல்களும்   அதற்கு  எதிரான  பாதுகாப்பு   தாக்குதல்கள்  என்ற  வகையில்  இஸ்ரேலின்  தாக்குதல்களும் தொடர்ந்தன.
·         இஸ்ரேல்  தனது  பாதுகாப் பைக்  காரணம் காட்டி  சோதனைச்சாவடிகளையும்   காசா போன்ற  பகுதிகளை   பிரித்து  தடுப்பு சுவர்களையும்  எழுப்பியுள்ளதுபலஸ்தீன  மக்களின்  சுதந்திர நடமாட்டம்  கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுஒரு  கிலோமீற்றர்   தூரத்தில் உள்ள  வைத்தியசாலையைக்கூட  நூறு  கிலோமீற்றர்கள்  சுற்றிச் செல்லவேண்டிய  துர்பாக்கிய நிலை   உருவாக்கப்பட்டுள்ளது.
·         உணவு முதல்    மருந்துவரை  சகல அடிப்படை தேவைகளும்  இஸ்ரேல்  இராணுவத்தில்  மட்டுப்படத்தப்பட்டுள்ளதுஇஸ்ரேல் செல்வசெழிப்பான  நாடாக மிளிர  பலஸ்தீனம்  வேலையில்லா  திண்டாடத்திலும்  வறுமையிலும் உழல்கிறது.
·         இஸ்ரேல் நாட்டினை  ஏற்றுக்கொண்டால்   பலஸ்தீனத்திற்கு  சுயாட்சி  கிடைக்கும்   என்ற அடிப்படையில்  1994 இல்  ஒஸ்லோ  உடன்படிக்கையின் படி  பலஸ்தீன   அதிகார சபையை  பலஸ்தீன  விடுதலை   அமைப்பின்  தலைவர்  யசீர்  அரபாத்  ஏற்க்கொண்டார்அவர்  இறந்தே  பல   ஆண்டுகள்  கடந்துவிட்டன.   இருந்தாலும்   இன்றுவரை   அது  நிறவேற்றப்படவில்லை. மாறாக அது பலஸ்தீன  விடுதலை இயக்கங்களுக்குள்  மேலும் அதிகமான  உள்முரண்பாடுகளை  ஏற்படுத்தியது.
·         கசாவை  ஹமாசும்  மேற்கு கரையை  பத்தா அமைப்பும்  கட்டுப்பாட்டில் கொண்டுள்ளன.  2008  டிசெம்பர்  27 ஆம்  திகதி  ஹமாஸ்  குழுவினரின்  எறிகணை   தாக்குதல்களுக்கு  பதிலடி கொடுப்பதாக கூறி   மூன்றுவார   இராணுவ   நடவடிக்கையை   இஸ்ரேல்  மேற்கொண்டதுஇப்போரில்  1417  பலஸ்தீன  பொதுமக்கள்  கொல்லப்பட்டனர்.
·         காசா பகுதியின் சகல  கட்டமைப்புகளும்  அழிவுக்குள்ளாகின  இப்படுகொலைகள்  தொடர்பில்   .நா.மனிதவுரிமைகள்  சபை  தென்னாபிரிக்க   நீதிபதி  ரிச்சர்ட் கோல்ட்டோன்  தலைமையில்  உருவாகிய குழு  தனது அறிக்கையில்  இஸ்ரேலின்  போர்க்குற்றங்களை   எடுத்துச்சொல்லியிருந்தது. எனினும் வழமைபோலவே  இஸ்ரேல்  அதனைக் கண்டுகொள்ளவில்லை. அந்த அறிக்கையும் குப்பையில் வீசப்பட்டுவிட்டது.
·         .நா.இஸ்ரேல் தொடர்பில் எதுவித நடவடிக்கையும்  எடுக்காத வகையில்  அமெரிக்கா  தலையிட்டு வருகிறது. இன்றுவரை  இந்தநிலையே  பலஸ்தீனத்தில் நிலவுகின்றது. பலஸ்தீன மக்கள்  இஸ்ரேல்  இராணுவத்தின்  கெடுபிடிகளுக்கும்பொருளாதார  தடைகளுக்கும்,   மீன் பிடிபோன்ற  வாழ்வாதார தடைகளுக்கும்  உள்ளாகியுள்ளனர்அவர்களுக்கு  முறையாக மின்சாரமோ, எரிபொருளோ, சுதந்திர  நடமாட்டத்தின்  போக்குவரத்து  வசதிகளோ  இல்லை.
·         இந்த மக்களுக்கான  உரிமைகளை  பெற்றுக்கொடுப்பதற்கு  உலகில்  எந்த சக்தியுமில்லைதமக்கு  இழைக்கப்பட்ட  கொடுமைகளுக்கு  நீதி வேண்டியும், சுதந்திரமான  வாழ்வு வேண்டியும்  பலஸ்தீன மக்கள் இந்த கணம்வரை  போராடிவருகிறார்கள். இந்த நிலையில்  தற்போது  மீண்டும்  காசா  மீது  இஸ்ரேல்  தாக்குதல் தொடுத்துள்ளதுநூற்றுக்கும்  அதிகமான  பலஸ்தீன  பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
·         காசாவிலிருந்து  தமது  பிரதேசத்தின் மீது ஹாமாசால்  தொடுக்கபபடுகின்ற  எறிகணை  தாக்குதல்களை  மேற்கொள்வதாக  இஸ்ரேல்  கூறுகிறதுசமாதானத்திற்காக  நோபல் பரிசு  வாங்கிய  அமெரிக்க  ஜெனாதிபதி  ஒபாமாவும்   இஸ்ரேல்  தற்பாதுகாப்பையே   மேற்கொள்வதாகவும்  அதற்கான உரிமை   இஸ்ரேலுக்கு  உண்டென்றும்  வெளிபடையாக அறிவித்துவிட்டார். ஆனால்  இஸ்ரேலில்  நடக்கவிருக்கும்  தேர்தலை  ஒட்டியே  இந்த தாக்குதல்கள்  இடம்பெறுகின்றன  என்பது அவதானிகளின் கருத்தாக  இருக்கிறது.
·         இதேவேளை  கடந்த  வியாழனன்று  (29-11-12) பலஸ்தீன  வரலாற்றில்  மிக முக்கிய நாளாக அமைந்தது.நா.சபையில்  இதுவரை பலஸ்தீனிய  ஜனாதிபதி  மஹ்மூத் அப்பாஸ்  மேற்கு கரை, காசா மற்றும்  கிழக்கு ஜெருசலேம்   ஆகிய  பிரதேசங்களை  உள்ளடக்கிய  பலஸ்தீன நாட்டை   அங்கீகரிக்குமாறு  .நா.பொதுச்சபையில்  விடுத்த  வேண்டுகோளின் டிப்படையில்   இடம்பெற்ற வாகெடுப்பில்  பலஸ்தீனம் வெற்றி பெற்றுவிட்டது.
·         இதுவரை  .நாடுகள்  உறுப்பினர் அல்லாத நாடு  (no membre state) என்ற தகுதியோடு  பலஸ்தீனம்  இருந்து வந்திருந்ததுஇப்போது  கிடைத்த  வெற்றியின்  மூலம்  .நா வின் பார்வையாளர் (observar  status) தகுதி பெற்ற நாடாக  பலஸ்தீனம்  மாறியிருக்கிறதுஇது தனிநாட்டு  அங்கீகாரத்துக்கு முன்னைய படிநிலையாகும்இந்த வெற்றியானது  பலஸ்தீனத்தின்  தனிநாட்டுக்கான  போராட்டப்பாதையில்  பெறுமதியான  நகர்வாக அமைகின்றது.
·         மேலும்  காசா மீதான இஸ்ரேலின்  தாக்குதல்கள்  காரணமாக  பலஸ்தீன மக்கள்  மத்தியில்  தோன்றிய   பதட்டமான  நிலையில்  பலஸ்தீன   அதிகார  சபையின்  ஜனாதிபதியாகவுள்ள   மஹ்மூட் அபாசும்  எதாவது செய்யவேண்டிய  நிலை  இருந்தததை   மறுக்க முடியாதுதற்போது  இந்த  வாக்கெடுப்பில்   வெற்றி  பெற்றதன்  மூலம்  அப்பாசின் செல்வாக்கு  காப்பாற்றப்பட்டுள்ளது எனலாம்.
·         இது  இவ்வாறு  இருக்க  அமரிக்கா, இஸ்ரேல், பிரிதானியா, கனடா, போன்ற  நாடுகள்  இந்த  விடயத்தில் தமது காழ்புணர்ச்சியை  காட்டியுள்ளன. அமெரிக்காவும்  இஸ்ரேலும்  இத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.


d. இலங்கையின் வடமேல், வடகடல் பகுதிகளில் பெற்றோலிய ஆய்வு
§  இலங்கை தீவாக இருப்பதால் கடல்வளம் நிறைந்த நாடு.
§  அதனோடு தொடர்புடைய வளங்களை இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த பயன்படுத்தலாம்.
§  எண்ணற்ற கடல் வளங்களை இலங்கை கொண்டுள்ளது. அவை உயிர் சார்ந்தவையாகவும் உயிர் சாராதவையாகவும் இருக்கின்றன. இலங்கையின் பொருளாதார சுற்றுலாத்துறை, மீன்பிடி போன்றன இந்த சமுத்திர வளத்தைச் சார்ந்ததாக இருக்கின்றன.
§  மன்னார் கடலடித்தளப்பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு வளம் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. ஆனால் அதை முற்றாகப் பெற்று நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பயன் படுத்துவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுகின்றன.
§  1967 இலே முன் முதல் பெற்றோலியத்துக்கான தேடல் தொடங்கியது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்காக வெளி நாடுகள் ஆய்வுகளை மேற்கொண்டன.
§  1970 களில் சோவியத் யூனியன் தென்னாசிய நாடுகளில் அதிக அக்கறை காட்டியது. இலங்கையுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. மன்னார் தீவில் பேசாலை-1 என்ற 2594 மீற்றர் ஆழமான ஆழ் துளைக் கிணற்றைக் கிண்டியது. மணற்கல் எனப்படும் குவாட்ஸ் பாறைகளும் மிகவும் சிறிய அளவிலான கரைந்த வாயுவும் கிடைத்தது.
§  அதைத் தொடர்ந்து பேசாலை -2, 3 என்ற கிணறுகளையும் உருவாக்கினர். முயற்சி தோல்வியடைந்தது.

§  1975 இல் பெற்றோலிய கூட்டுத்தாபனம் காவிரி கடலடித்தளப்படுக்கைக்குட்பட்ட இலங்கையின் பகுதிகளில் பெஃஸமின் பசுபிக் நிறுவனம் ஆராய்ச்சியை மேற்கொண்டது.  நிலத்தடி ஆய்வுக்காக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது. மரதன் பெற்றோலியத்துடன் இணைந்து பாக் பே -1, டெல்ஃப்ட்-1 என்ற இரு ஆழ் துளைக் கிணறுகளை உருவாக்கியது. முயற்சி வெற்றியளிக்கவில்லை. 1977 இல் முயற்சி கைவிடப்பட்டது.

§  1981 இல் Cities Services நிறுவன் ஆர்வமாக வந்தது. பீற்றோ -1 என்ற ஆழ் துளைக்கிணறை காவிரி கடலடித்தளத்தின் வட பகுதியில் உருவாக்கியது. முயற்சி வெற்றியளிக்கவில்லை.
§  1984 இல கனடா நாட்டு நிறுவனங்கள் மன்னார் கடலடித்தளப்பகுதிகளில் ஆய்வை மேற்கொண்டன. நாட்டில் நிலவிய அசாதாரண நிலைமையால் 2001 வரை இவ்வாய்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

§  2001 ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இலங்கையின் பெற்றோலியக் கொள்கைகள் தொடர்பிலான வரைபு நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்டது. அந்த விளக்க அறிக்கையில் பெற்றோலிய சட்டம், பெற்றோலிய வள உடன்படிக்கை பற்றிய வரபுகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன.

§  அவுஸ்திரேலியாவில் இயங்கும் நோர்வே நாட்டு கம்பனி இரு பரிமாண நில  நடுக்கத்தரவுகளை பெறுவதற்கான ஆய்வை மேற்கொள்ள ஆர்வம் கொண்டது. ஆய்வின் முடிவு மன்னார் கடலடித்தளப்பகுதியில் பெற்றோலிய வளத்தின் இருப்புக்கான சாத்தியக்கூறுகளை உறுதி செய்தது.

§  2002-2006 வரை இலங்கை அரசும் அந்த நோர்வே கம்பனியும் இணைந்து பெற்றோலிய ஆய்வில் ஈடுபடும் கம்பெனிகளை ஈர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டன.

§  2007 இல் இலங்கை அரசின் அமைச்சரவைத்தீர்மானத்துக்கமைய நோர்வே நாட்டுக் கம்பனிக்கு இலங்கைக் கடற்பரப்பில் ஆய்வு செய்ய வழங்கிய உரிமம் இரத்துச் செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் பெற்றோலிய வள சாத்தியப்பகுதி 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. (3340 to 6640 sq. km) அவற்றுள் 3 ஐ மட்டும் சர்வதேச அனுமதிப்பத்திரம் வழங்குவதன் மூலம் பெற்றோலிய ஆய்வுக்குட்படுத்த அமைச்சரவை முடிவு செய்தது.

§  ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கும் இலங்கை பெற்றோலிய வள அபிவிருத்தி செயலகம் 2007 ஆம் ஆண்டு அந்த அனுமதிப்பத்திரம் வழங்கலை அறிவித்தது. இலண்டன், கோலாலம்பூர் போன்ற பல இடங்களிலும் சந்தைப்படுத்தல்  நடைபெற்றது.

§  முதலாவது பிரிவுக்கு 3 கோரல்கள், இரண்டாவதுக்கு 2 கோரல்கள், மூன்றாவதற்கு 1 கோரல் வீதம் கிடைக்கப்பெற்றது.

§  முதலாவது பிரிவுக்கு மட்டும் அனுமதிப்பத்திரம் வழங்கலாம் என அமைச்சரவை அமைச்சர்களால் முடிவு செய்யப்பட்டது. Cairn India Limited தெரிவு செய்யப்பட்டது. ஜூலை 7 2008 இல் பெற்றோலிய, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சினால் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

§  தற்போது 2000மீ ஆழம் வரை ஆய்வுப்பணிகள் நடக்கின்றன.


* இலங்கையின் கடல்வளம்
§  3000 மீற்றர் ஆழத்துக்கு கீழே ஐதரோ காபன் படிமங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன. (காவேரி, மன்னார் கடலடிப்படுக்கைகள்)


§  /* மாலைதீவு- சமுத்திரம் சார் சுற்றுலாத்துறை – மொத்த தேசிய உற்பத்தியில் 22% (2012). ஃபிஜி – சுற்றுலாத்துறை, தகரத்தில் அடைக்கப்பட்ட மீன்
§  
§  இலங்கைக்கே உரித்தான கடற்பரப்பு: 21, 500 km2

§  Exclusive Economic zone - 517, 000 km2 (UN Law of seas)

§  இலங்கையினுடைய 10 வருட அபிவிருத்திக்கொள்கை (2007-2016)

§  ஐக்கிய நாடுகளின் கடல் சட்டத்துக்கமைய இலங்கை தன் கடற்படுக்கையில் 1கி.மீ க்கு மேற்பட்ட தடிப்புடைய வண்டல் மண்படிவுகளைக்கொண்ட கடற்பரப்பை தனக்குரியதாகக் கோர தகுதி வாய்ந்தது.
§  இலங்கையின் பரப்பளவை விட 23 மடங்கான கடற்பரப்பு இலங்கைக்குரியதாகும். இறந்த உயிர்வளங்கள், கனிப்பொருள் நிறைந்த பகுதி

§  30 வருட யுத்தத்தால் உச்சப் பயன்பாடு பெறப்படவில்லை.


§  மீன்பிடி:
   §  கரையோர மீன்பிடி
   §  ஆழ்கடல் மீன் பிடி
  §  2012 இல் மொத்த பிடிக்கப்பட்ட மொத்த மீன் 417, 220 MT
 §  ஆழ்கடல் மீன் பிடி-உச்சப் பயன்- தொழில் நுட்பப் பற்றாக்குறை, முதலீடு (ஜப்பான், சீனா), ஆய்வு இடைவெளி
§  2016 இல் 461, 959 MT ஆக்குதல் – கொள்கை

§  கடற்போக்குவரத்து:
   §  சமுத்திர வள உச்சப்பயன்பாடு
   §  இலங்கை-இந்தியா
   §  வட-தென்னிலங்கை
               பிரச்சினைகள்
    §  பாதுகாப்புக் காரணங்கள்
    §  பயணிகள், பண்டங்களை ஏற்றி இறக்க செல்வு குறைந்த வழி
    §  கொழும்பு-தூத்துக்குடி – பயணப்படகு
    §  ஒருங்கிணைப்பு பொறிமுறை

§  சுற்றுலாத்துறை
     §  WHALE WATCHING – DONDRA-MIRISSA, KALPITY –DEC-APRIL
     §  DOLPHIN WATCHING
     §  WIND SURFING BENTOTA, TANGALLE, HIKKADUWA, POTTUVIL, ARUGAMBAY
     §  WATERSPORTS
 a.       மனித உரிமைகளும் மேற்குலக நாடுகளும்
 உலகளாவிய மனித உரிமைப்பிரகடனம்        :

o    சித்திரவதை அதிகரிப்பு (1998)
o    9/11 தீவிரவாதத் தாக்குதல்
o    மற்றைய நாடுகள் மீதான ஒடுக்குமுறை
o    வளங்களுக்காக
o    மேற்குலக நாடுகள்: குடிசார், அரசியல் உரிமைகள்
o    அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள்: சமூக, பொருளாதார உரிமைகள்

o    அமெரிக்கா:
§  மனித உரிமைப் பிரகடனம் உருவாவதில் ஆதிக்கம்
§  சர்வதேச மன்னிப்பு சபை (1961-ஐக்கிய இராச்சியம்) – தூக்குத்தண்டனை, அப்பாவிகள் கொல்லப்படல்
§  பொலிஸ் அலுவலரின் கொடூரத்தன்மை
§  44 மில்லியன் மக்களுக்கு சுகாதாரக் காப்புறுதி இல்லை
§  சுகாதாரம்- வசதி, மனித உரிமை அல்ல
§  அபாயகரமான கைத்தொழில் சூழல் – கனிய அகழ்வு, விவசாயம்
§  சிறுவர்தொழிலாளர்கள்
§  சித்திரவதை
§  மின் அதிர்வு உபகரணங்களின் தவறான பாவனை
§  பாலியல் சித்திரவதைகள்
§  2 இலட்சம் பேர் சிறைகளில்
§  1999 – அதிகளவில் மந்த உரிமை மீறல் நடைபெற்ற நாடு
§  உள்ளூர் இராணுவத்தை அனுப்பி மக்களின் உரிமைகளை மீறல்
§  சம்மதிக்காத தன்மை: சர்வதேச குற்றவியல் நீதி மன்றம், சர்வதேச கண்ணிவெடி ஒப்பந்தம், கியோட்டோ ஒப்பந்தம், ஐ, நாவுக்கு வழங்க வேண்டிய 244மில்லியன் டொலர்களை வழங்காமை
§  சர்வதேச குடிவரவாளார்களை, புகலிடக்கோரிக்கையாளர்களை நாட்டின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளாமை
§  தொழிலாளர் தராதரங்கள், குறைபாடுகள்

·         இந்தோனேசியா
o    மேற்குலக ஆதரவு, ஆயுத உதவியுடன் கிழக்கு திமோரில் பல மனித உரிமை மீறல்கள் நடைபெற்றிருக்கின்றன.
o    சாட்சிகள் இல்லாதொழிக்கப்பட்டிருக்கின்றன.
o    படுகொலைகள், கொலைகள்

·         சீனா
o    அரசியல் எதிரிகள், அரசுக்கு எதிரான ஊடகவியலாளர்களை சிறைக்கு அனுப்புதல்
o    சுதந்திர இயக்கத்துக்கான தடை
o    ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு
o    இனம், சாதி தொடர்பான முரண்பாடுகளை தோற்றுவித்தல்
o    உள்ளூர் நலன் கருதாத பொருளாதாரக் கொள்கைகள்
o    நலிந்த நாடுகளை ஆதிக்கம் செய்ய முயல்தல்
·         அவுஸ்திரேலியா
o    சுதேசமக்கள் மீதான பாரபட்சம் –
§  3 ஆம் உலக நாடுகளை ஒத்த வாழ்க்கை
§  காணி இழப்பு
§  வறுமை
§  நோய்த்தாக்கம் அதிகம்
o    ஐ. நா வுடனான மனித உரிமை கடப்பாடுகளை குறைக்க முயன்றமை
o    ஆசிய குடியேற்ற வாசிகள் மீதான இனத்துவேசம்
·         ஐரோப்பா
o    20 ஆம் நூற்றாண்டு – யுத்த நூற்றாண்டு
o    எண்ணற்ற மரணங்கள்
o    பல மனித உரிமை மீறல்கள்
o    மேற்கு ஐரோப்பா :
§  குடியேற்றவாசிகளுக்கு எதிரான கொள்கை
o    கிழக்கு ஐரோப்பா
§  சோவியத் ஒன்றியத்தின் உடைவுக்கு பின்னரான முரண்பாடுகள்

o    மனித உரிமையின் பின்னணி
o    இரண்டாம் உலகப்போரின் கொடூரம்
o    நாசிசவாத ஆட்சி
o    கண்காணிக்கவேண்டிய தேவை
o    ஹெர்ஷ் லாடெவ்பாச்
§  பிரபல சர்வதேச சட்ட வல்லுநர்
§  சர்வதேச தேசிய சட்டங்களின் இறுதி நோக்கம் மனித ஆளுமையையும் அடிப்படை உரிமைகளையும் பாதுகாத்தல்
o    இரண்டாம் உலகமகாயுத்த முடிவினால் ஏற்பட்ட மாற்றங்கள்
§  ஐரோப்பிய காலனித்துவ நாடுகளுக்கு கிடைத்த விடுதலை
§  ஐக்கிய நாடுகள், அதனோடு இணைந்த நிறுவன்ங்களின் தோற்றம்
·         சர்வதேச சமாதானம், பாதுகாப்பை நிலை நிறுத்துதல்
·         மனித உரிமையை பாதுகாத்து மேம்படுத்தல்

o    ஐ. நா வின் மனித உரிமைப் பிரகடனம்
o    26 நாடுகள் இணைந்து 1942 இல் உருவாக்கப்பட்டது
o    1945 ஜூன் கைச்சாத்திடப்பட்டது.
o    முதல் கூட்டம் இலண்டனில் 1946 இல் நடைபெற்றது
o    உறுப்புரிமை நாடுகளிடையே இறைமையையும், சமத்துவத்தையும் பேணுவதுடன் பிணக்குகளை சமாதான முறையில் தீர்வு காண்பதும் எந்த அரசினதும் ஆட்புல உரிமைகளையும் அரசியல் சுதந்திரத்தை மதித்து நடப்பதுமாகும்.
o    சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் 1948 இல் உருவாக்கப்பட்டது
o    குடியியல் அரசியல் பொருளாதார சமூக கலாசார உரிமைகள்
o    வரைந்தவர் ஐக்கிய நாடுகள் சபையின் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பிரதிநிதியும் மனித உரிமைகள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவின் தலைவருமான எலியனார் ரூஸ்வெல்ட் (Eleanor Roosvelt). ஐ. நாவின் முதல் பெண்மணியும் இவராவார்.


o    மனித உரிமை / அடிப்படை உரிமை
o    பொதுவான உரிமைகளாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து உரிமைகளும் ஐ.நா.சபையாலும் ஏனைய நிறுவனங்களினாலும் வெளியிடப்பட்டுள்ள உலகளாவிய ரீதியில் அமைந்த பொதுவான உரிமைகள் மனித உரிமைகள். பொதுவான மனித உரிமைகள் மீறப்பட்டால் உள்நாட்டில் நிவாரணம் பெற முடியாது.
o    அடிப்படை உரிமைகள் என்பது குறித்த நாட்டு அரசியல் யாப்பினால் உருவாக்கப்பட்ட உரிமைகளாகும். அடிப்படை உரிமைகளானவை மீறப்பட்டால் உள்நாட்டுச் சட்டதிட்டங்களுக்கமைய நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்தோ அல்லது அது தொடர்பான நிறுவனங்களில் முறைப்பாடு செய்தோ நிவாரணம் பெற்றுக் கொள்ளமுடியும்.

o    ஐ. நாவின் மனித உரிமைகள் சபை (UNHRC)
o    15 மார்ச் 2006 தீர்மானம்
o    170/191 ஆதரவு
o    அமெரிக்கா, மார்ஷல் தீவு, இஸ்ரேல் எதிர்த்து வாக்களிப்பு
o    47 இருக்கைகள்
§  13-ஆபிரிக்கா
§  13-ஆசியா
§  8-இலத்தீன் அமெரிக்கா
§  7-ஐரோப்பா, ஏனையவை
o    16 ஜூன் 2006 இலிருந்து வேலைகளை ஆரம்பித்துள்ளது

a)       இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள்

அரச சார்பற்ற நிறுவன்ங்களுக்கான தேசிய செயலகம்
 • நிவாரண மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளில் பங்களிப்பு நல்கும் பொருட்டு தேசிய மற்றும் சா;வதேச சமூகங்களுக்குச் சாதகமான சுற்றுச்சுழலை உருவாக்கல்.
 • அரச சாhபற்ற அமைப்புகள் மத்தியில் அரச சாh;பற்ற அமைப்புக்கள் பிhpவானது அரச துறை நிறுவனங்கள் மற்றும் அரச சாhபற்ற அமைப்புக்களின் சேவைகள் அவசியமாகின்ற மக்களுடன் இணைப்பாக்கம் செய்தல்.
 • அரச சாhபற்ற அமைப்புக்களின் கருத்திட்டங்கள் தீவின் சட்டக் கட்டுக்கோப்புக்குள்ளே இடம் பெறுகின்றனவென்பதை உறுதி செய்தல்.
 • அரச சாhபற்ற அமைப்புக்கள் தீவின் தேசிய கொள்கைச் சட்டகத்திற்குள்ளே செயலாற்றுகின்றனவென்பதை உறுதி செய்தல்.
சட்ட ஆளுகை

o    சமூக அமைப்புகளின் ஒரு பகுதி
o    அரசசார்பற்ற நிறுவனங்கள் என்பது அரசாங்கத்திடமிருந்து எந்தவித உதவிகளையும் பெறாது
o    சமூக அபிவிருத்தியைக் குறிக்கோளாகக் கொண்டு
o    எந்தவித இலாபத்தையும் எதிர்நோக்காது,
o    மக்களுக்குச் சேவைகளை வழங்குபவை.
o    தங்கெளுக்கென ஒரு குறிப்பிட்ட நோக்கத்தினை அடைவதற்கு முயல்கின்ற தன்னிச்சையாக இயங்குகின்ற நிறுவனங்களாகும்.'
அரசசார்பற்ற நிறுவனங்களின் நோக்கங்கள்
Ø        மக்களது ஏழ்மை நிலையைப் போக்குதல், வறுமையை ஒழித்தல், மக்களது கல்வி, கலாசார, சமூகப் பொருளாதார நிலையை உயர்த்த நடவடிக்கை எடுப்பது.
Ø        மக்களின் வறுமை நிலைக்கான காரணத்தை தெளிவுபடுத்தி அவர்களை விழிப்படையச் செய்தல்.
Ø        மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதற்காக பிரதேச மட்டத்தில் ஒத்த நோக்கங்களைக் கொண்டு செயற்படும் நிறுவனங்களிடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்தி ஒன்றித்து செயற்படல்.
Ø        கைத்தொழில், விவசாயம் போன்றவற்றில் மக்களை ஈடுபடச் செய்தல், அதற்கான கடன்களை வழங்கல், ஏனைய நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களைப் பெற உதவுதல், சுயதொழில் முயற்சிகளை ஊக்குவித்தல்.
Ø        இளைஞர்கள் விரக்தியடைவதைத் தடுத்தல், அவர்களுக்கான தொழிற்பயிற்சிகளை வழங்குதல், வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல், பெண்கள் நிலையை மேம்படுத்த திட்டங்களை வகுத்துச் செயற்படல்.
Ø        இனமுரண்பாட்டுச் சூழலில், இனங்களுக்கிடையில் பரஸ்பர நல்லுறவை ஏற்படுத்த பாடுபடல், சமாதானம், அமைதியை உருவாக்க உழைத்தல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல்.
Ø        இடம்பெயர்ந்த மக்களது வாழ்க்கையை மேம்பாடு அடையச் செய்தல், நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களினது தேவைகளைக் கவனித்தல்.
o    (உணவு வழங்கல், சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்) புனர்வாழ்வு, புனரமைப்பு, இயற்கை அனர்த்தங்களின் போது பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடி, நீண்ட கால உதவிகளைச் செய்தல்,
o    மக்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்து மக்கள் உதவியுடன் அமுல்படுத்தல் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் தனியாகவும், அரசோடும் இணைந்து செயலாற்றுதல்.

o    பிரித்தானிய காலனித்துவத்தில் இன்றைய அரசசார்பற்ற நிறுவனங்களை ஒத்தவகையி;ல் ஊழியர் இயக்கம், (1893) மது ஒழிப்பு இயக்கம் (1911) போன்ற பல நிறுவனங்கள் நகரமயமாக்கல், மரபுரீதியான விவசாய முறைகளிலிருந்து கைத்தொழிலை நோக்கிச் செல்லல் போன்ற பல சமூக பொருளாதார செயற்பாடுகளில் ஈடுபட்டன.

o    பிரித்தானிய அரசால் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைகள் இலங்கையில் கிராமிய வறுமையைத் தீவிரமடையச் செய்தன. இதனை குறைப்பதை நோக்காகக் கொண்டு காலனித்துவ அரசு 1939 ஆம் ஆண்டு கிராமிய நலன்புரி நிலையங்களை நிறுவியது. இதனைத் தொடர்ந்து 1947 இல் கிராமிய அபிவிருத்திச் சங்கங்களும் (சுனுளு)  தோற்றம் பெற்று கிராமிய அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபட்டன.
o    1880 இல் கிறிஸ்தவ இளைஞர் அமைப்பு கிறிஸ்தவமதம் சார்ந்த அமைப்பாகச் செயற்பட மகாபோதி சங்கம் (1891) பௌத்த பிரமஞான சங்கம் (1880) என்பவை பௌத்தமதம் சார்ந்தவையாகவும், விவேகானந்தசபை (1902) இராமகிருஸ்ணமிசன் (1929) இந்துமதம் சார்ந்தவையாகவும், முஸ்லிம் கல்வியமைப்பு (1931) இஸ்லாமியமதம் சார்ந்தவையாகவும் செயற்பட்டன. இவை சமயம் சார்ந்தவையாக செயற்பட்ட போதிலும் இவற்றின் பொதுவான பண்பு சமூகசேவை மற்றும் சமூகநலன் பேணல் என்பதாகும்.

1977 இன் பின்னரான மாற்றங்கள்
o    தனியார் மயமாகிய வர்த்தகம், கல்வி, சுகாதாரம்
o    பாரிய உட்கட்டமைப்பு வசதிகளுக்காக கடன் பெற்றமை
o    வெளி நாட்டு முதலீட்டை கவர
o    சமூக அரசியல் நீதிக்கான போராட்ட்த்தை உருவாக்கியது
o    அரச சார்பற்ற நிறுவன்ங்களின் தேவை அதிகரிப்பு

o    இலங்கையில் 1977 இன் பின்னரே அரசசார்பற்ற நிறுவனங்களினுடைய அதிகரித்த செயற்பாட்டைக் காணக்கூடியதாக உள்ளது. இக்காலகட்டத்தில் சுமார் 65 வீதமான நிறுவனங்கள் செயற்பட்டதை அவதானிக்க முடிகின்றது. இலங்கையில் அரசசார்பற்ற நிறுவனங்கள் தமது அபிவிருத்திச் செயற்பாடுகளை அரசாங்கத்துடன் இணைந்தும், தனியாகவும் மேற்கொண்டன. தற்போது இலங்கையில் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் சுமார் 6000- 8000 அமைப்புக்கள் செயற்பட்டு வருவதாக் தொகுப்புக்கள் கூறுகிறது.

o    இலங்கையில் செயற்பட்டு வரும் அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆரம்ப காலங்களில் நாட்டின் அபிவிருத்தியைக் குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டு வந்திருப்பினும், பிற்காலத்தில் அபிவிருத்தி என்ற தன்மையிலிருந்து இவற்றினது செயற்பாடுகள் புனர்வாழ்வு, புனரமைப்பு, இடம்பெயர்ந்தோர் நலனைப் பாதுகாத்தல், மேம்படுத்தல் என்ற அடிப்படையில் மாற்றியது. இருப்பினும் 'அபிவிருத்தி' செயற்பாடுகளைத் தொடர்ந்த வண்ணமே உள்ளது.இன்றும் தனது அபிவிருத்தியினை மக்களை சார்ந்த வண்னம் அமைந்துள்ளது.

o    இலங்கையில் அரசசார்பற்ற நிறுவனங்கள் பின்வரும் சேவைகளை வழங்கி வருகின்றன.
o    (அ) சமூக பொருளாதார அபிவிருத்தி
§  இதன்படி மக்களுக்குத் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல், நிதி உதவிகளை வழங்குதல், கடன்களை வழங்குதல், மக்களிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தல், வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுத்தல், அங்கவீனருக்கு உதவுதல் போன்றன.
o    (ஆ) சுகாதார சமூக நலன் பேண் சேவைகள்
§  இதன்படி சூழல் பாதுகாப்பு, மன நல மருத்துவம், சமூகப்புனர்வாழ்வு நடவடிக்கை, குடும்பத் திட்டமிடல், மலசலகூட வசதிகளை ஏற்படுத்தல், குடிநீர் வசதி, கொள்ளை நோய்கள், பாலியல் நோய்களுக்கு எதிரான தடுப்பு முறைகள், சிறுவர் முதியோர் பராமரிப்பு, போசாக்கான உணவு பெறல் போன்றவைகளாகும்.
o    (இ) கல்வி
§  தொழில்பயிற்சிகளை வழங்குதல், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்குதல், பாடசாலைக்கட்டிடங்கள், நூல்நிலையங்கள் அமைத்துக்கொடுத்தல், இலவசக்கல்வி, இலவச ஆசிரியர் சேவைகளை வழங்குதல் போன்றனவாகும்.
o    (ஈ) சமூக கலாசார நடவடிக்கைகள்
§  இன, மத, சாதி வேறுபாடுகளை அகற்றுதல், நற்பழக்க வழக்கங்களை மக்களிடையே ஊட்டுதல், மூட நம்பிக்கையை அகற்றுதல் போன்றன.
o    (உ) மனித உரிமைகளைப் பாதுகாத்தல்
§  இவை தொடர்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல், யுத்த நடவடிக்கைகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்தல், போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், நோயாளர் பராமரிப்பு. கைது செய்யப்பட்டோர், தடுப்புக் காவலில் உள்ளோரது நலன்களைப் பாதுகாத்தல், இவற்றுடன் இடம் பெயர்ந்தோரது நலன் போன்ற பல்வேறு விடயங்களில் அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது கவனத்தைச் செலுத்தி வருகின்றது. இவ்வாறாக அரசசார்பற்ற நிறுவனங்கள் பல செயற்படுகின்றன.


o    மனிதாபிமான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
o    அவசர உதவிகள்
o    வாழ்வாதார செயற்றிட்டங்கள்
o    சட்ட உதவிகள்
o    அபிவிருத்தி
o    வறுமை ஒழிப்பு
o    கல்வி
·         சமயம்
o    கலாசாரம்
o    நீடிப்பை உறுதி செய்தல்

நாட்டின் அபிவிருத்தி, சர்வதேச நிதி அமைப்புகளின் (சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி)ஆலோசனைக்கமைய திட்டமிடப்படும்.
பின் காலனித்துவ அரசின் ஆட்சியில் சமூக நலனுக்கு முக்கியத்துவம்
பின்னர் மக்கள் உரிமைகள் தொடர்பில் விழிப்பூட்டப்பட்டனர்.
கொளவனவு சக்திக்குரிய விலையுடனான உணவு – மானிய அடிப்படை
கல்வி – இலவசக்கல்விக் கொள்கை
சுகாதாரம் – இலவச சுகாதார வசதிகள்

o    கிராம மட்ட அமைப்புகள்
o    உள்ளூர் மக்களால் கிராமத்தேவைகளை பூர்த்தி செய்ய ஆரம்பிக்கப்பட்டன
o    மரணாதார சங்கம்
o    கிராம அபிவிருத்திச் சங்கம்
o    விளையாட்டுக் கழகம்
o    வெளி உதவிகள் இல்லை

o    வெளி நாட்டு உதவியுடனான ஸ்தாபனங்கள்
o    நிதி தொடர்பிலான கடப்பாடுகள்
o    வெளிப்படைத்தன்மை


2 comments:

Anonymous said...

மிக்க நன்றி

Anonymous said...

Highly appreciate your efforts...

Post a Comment