Monday, September 15, 2008

யாழ்ப்பாணக்கோட்டை





























































































ஏறத்தாள 140 ஆண்டுகள் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்டனர். இதனால் அவர்களின் சுவடுகளை இன்றும் யாழ்ப்பாண நகரத்தில் காணமுடியும். போத்துக்கீசர் கட்டிய கோட்டையை இடித்துவிட்டு, புதிய கோட்டையொன்றை ஒல்லாந்தர் கட்டினர். இன்று பறங்கித் தெரு என்று அழைக்கப்படும் இடத்திலேயே ஒல்லாந்தருடைய குடியிருப்புக்கள் அமைந்திருந்தன. மிக அண்மைக்காலம் வரை இப்பகுதியில் ஒல்லாந்தர் காலக் கட்டிடக்கலையைக் காட்டும் பல கட்டிடங்கள் இருந்தன. அண்மைக்காலத்தில் இடம்பெற்ற போர் நடவடிக்கைகளால் இவற்றுட் பல அழிந்துபோய் விட்டன.

யாழ் நூலகம்
































1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவு அழித்தொழிக்கப்பட்ட பொது நூலகத்தை திருத்தாது யாழ் மாநகரசபை அதை ஒரு கொடியசெயலின் சின்னமாக வைத்திருந்தது.



















2001 ஆம் ஆண்டு யாழ் பொது நூலகம் மீள எழுந்து ஒரு மாபெரும் வரலாற்றுத்தவறை எதிர்காலச்சந்ததி உணரமுடியாமல் செய்துவிட்டது...